V4UMEDIA
HomeNewsKollywoodகிரிக்கெட்டர் நடராஜனை சந்தித்த யோகி பாபு!

கிரிக்கெட்டர் நடராஜனை சந்தித்த யோகி பாபு!

நடிகர் யோகி பாபுவும், கிரிக்கெட் வீரர் நடராஜனும் நல்ல நண்பர்கள். பெங்களூரூவில் இருவரும் சந்தித்து பேசினர். பிஸியோதெரபிக்காக பெங்களூரில் முகாமிட்டுள்ளார் நடராஜன். இந்நிலையில் பெங்களூரூ சென்ற யோகி, அங்கு நடராஜனை சந்தித்து பேசினார். ஓட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. உணவு அருந்தியபடி ஜாலியாக தங்கள் பொழுதை கழித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது நடராஜனுக்கு முருக பக்தரான யோகி பாபு, முருகர் சிலை ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதுப்பற்றி நடராஜன் டுவிட்டரில், ‛‛நினைவில் வைக்க வேண்டிய நாள். அன்பு நண்பர், நடிகர் யோகிபாபுவை சந்தித்தது மகிழ்ச்சியான தருணம்” என பதிவிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments