கோவையில் பசுமை இயக்கம் சார்பாக நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ரிங் நடனம் ஆடி அனைவரின் மனதையும் ஈர்த்த சிறுமி வர்னாவுக்கு பசுமை இயக்கம் சார்பாக அரச மர கன்று தரப்பட்டது.

மரத்தை வளர்த்துவதாக உறுதியளித்த வர்னா 05/07/2021 இன்று மதியம் அரச மரம் மரக்கன்றை கோவை பீளமேடு சூர்யா கார்டனில் உள்ள பார்க்கில் நட்டு வளர்க்க தொடங்கியுள்ளார்.

சிறுமி வர்னாவிற்கு பசுமை இயக்கம் வருடம் வருடம் மரத்தின் வளர்ச்சியை பார்வையிட்டு வருடம் தோறும் ருபாய் ஆயிரத்தை ஊக்க தொகையாக தரும் என்று கூறியது குறிப்பிட்ட தக்கது.இப்படி குழந்தைகளை மரம் நட அனைவரும் ஊக்குவிப்போம்.. மரம் வளர்ப்போம்… மனித உயிர் காப்போம்…