V4UMEDIA
HomeNewsBollywood15 வருட வாழ்க்கை… விவாகரத்தை அறிவித்த அமீர்கான் தம்பதி

15 வருட வாழ்க்கை… விவாகரத்தை அறிவித்த அமீர்கான் தம்பதி

பாலிவுட் நடிகர் அமீர்கான் – கிரண் ராவ் தம்பதி இருதரப்பு சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுள்ளனர். 2005 திருமணம் செய்து கொண்ட அமீர் கான் பிராப்தம் 15 ஆண்டு காலமாக இணைந்து வாழ்ந்து வந்தனர்.

லகான் திரைப்படத்தின் போது கிரண் ராவ் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமீர்கான் இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளார். இந்த சூழலில் இருவரும் ஒன்றுபட்டு விவாகரத்து பெற்றுள்ளனர். இதுகுறித்து இருவரும் ஒன்றாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த பதினைந்து ஆண்டுகால அழகான வாழ்க்கையில் அனுபவங்கள் ,மகிழ்ச்சி ,சிரிப்பு ஆகியவற்றை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எங்கள் உறவு ,நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பை மட்டுமே வளர்த்தது.

நாங்கள் இப்போது எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறோம். இது கணவன் மனைவியாக அல்ல. ஆனால் பெற்றோராக மற்றும் குடும்பமாக இதை செய்ய உள்ளோம். சில வருடங்களுக்கு முன்பே நாங்கள் இது குறித்து திட்டமிட்டு பிரிந்தோம். எங்கள் மகன் ஆசாத்துக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோராக இருப்போம். நாங்கள் ஒன்றாக அவனை வளர்ப்போம். திரைப்படங்கள் , பானி அறக்கட்டளை மற்றும் பிற திட்டங்களில் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்புடன் பணியாற்றுவோம். எங்கள் உறவின் இந்த பரிமாண வளர்ச்சிக்கு ஆதரவு அளித்த எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் நன்றி. இந்த விவகாரத்தை நீங்கள் முடிவாக அல்ல ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம் ” என்று குறிப்பிட்டுள்ளனர். அமீர்கான் – ரீனா தத்தா என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட நிலையில் 16 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2002 ஆம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments