V4UMEDIA
HomeNewsKollywoodநடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு!

நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு!

நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் நேரில் சென்று வழிபாடு நடத்தினார்.

சென்னை போரூர் அருகே கிருகம்பாக்கத்தில் நடிகர் அர்ஜூன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலின் கும்பாபிசேஷம் நேற்று நடைபெற்றது. 180 டன் எடை கொண்ட ஒற்றைக் கல்லில் வெண்ணிற ஆஞ்சநேயர் சிலை அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆஞ்சநேயர் சிலை மட்டுமின்றி அயோத்தியிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணின் மீது ராமர் சிலை வைக்கப்பட்டு, விநாயகர், நாகராஜர் சன்னதியும் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தீவிரம் குறைந்த பிறகு இக்கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அர்ஜூன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலுக்கு சென்ற முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆஞ்சநேயரை வழிபட்டார்.

Most Popular

Recent Comments