பெட்ரொல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால், நாட்டில் பெரும்பாலான இடங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. டீசல் விலையும் சில இடங்களில் சதம் அடித்துள்ளது. தமிழகத்திலும் நேற்று வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி வாகன ஓட்டிகளை அதிரவைத்துள்ளது .