V4UMEDIA
HomeNewsKollywoodமாஸ்டர் செப் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவில் விஜய் சேதுபதி!

மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவில் விஜய் சேதுபதி!

மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவில் விஜய் சேதுபதி வேஷ்டி சட்டையுடன் டக்கராக காணப்படுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. தற்போது சன் தொலைக்காட்சியினரும் அதேபோல் மாஸ்டர் செப் என்ற புதிய சமையல் நிகழ்ச்சியைத் துவங்கியுள்ளனர். மாஸ்டர் செப்  சமையல் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி செம மாஸாக குத்தாட்டம் போட்டு இந்த படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். விஜய் சேதுபதி அசத்தலாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. 

தற்போது விஜய் சேதுபதி வேஷ்டி சட்டையுடன் அசத்தலான கெட்டப்பில் இருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் ரியாலிட்டி ஷோ, மாஸ்டர்கெஃப் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. மண்ணின் கலைஞர்கள் சமைக்கும் உணவை ருசி பார்க்க இருப்பதாக விஜய் சேதுபதி ப்ரோமோவில் தெரிவித்துள்ளார். எனவே குக் வித் கோமாளி போலவே மாஸ்டர் செப் நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Most Popular

Recent Comments