Home News ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய அப்டேட் :

ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய அப்டேட் :

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உள்பட பலர் நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான கோமரம் பீம், அல்லூரி சீதா ராம ராஜூ ஆகிய கேரக்டர்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து படக்காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே பேலன்ஸ் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள, ஹிந்தி, ஜப்பான், ஸ்பானிஷ், சீனா ஆகிய மொழிகளிலும் ஆர்ஆர்ஆர் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் இரண்டு மொழிகளில் தங்களுக்கான டப்பிங் வேலைகளை முடித்து விட்டதாகவும், விரைவில் மொத்த பணியும் முடியும் என தெரிவித்துள்ளனர். இதனிடையே ராம்சரண், ஆலியாபட் இருவரும் அடுத்த வாரம் தங்களுக்கான பாடல் காட்சிகளில் நடிக்க இருப்பதாகவும் படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.