ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளில் ‘ஓ மணப்பெண்ணே’ படக்குழுவினர் கேக் வெட்டி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
நடிகர் ஹரீஷ் கல்யாண் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடியதையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்துக்களை பொழிந்தனர். மேலும் ஹரிஷ் கல்யாண் தற்போது நடித்து வரும் ஓ மணப் பெண்ணே படக்குழுவினரும் அவருக்கு கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்து பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளனர்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அன்பு, ஹரிஷுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். “நீண்ட நாட்களுக்குப் பிறகு படக்குழுவினரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹீரோ சார்” என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த ஹரிஷ் “எனக்கு இது ஏற்கனவே தெரியும். மிக்க நன்றி, மக்களே” என்று தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் தற்போது கார்த்தி சுந்தர் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் ஓ மணப்பெண்ணே படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ரித்து வர்மா நடிப்பில் வெளியான ‘பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ஓ மணப் பெண்ணே திரைப்படம்.
இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்குத் தயாராக இருக்கிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.