செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவர் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’ என்ற திரைப்படம் உருவாகி வருவது அனைவர்க்கும் தெரியும். ‘ராக்கி’ படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் சாணிக் காயிதம் படத்தையும் இயக்குகிறார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் பயங்கர ஆயுதங்களுடன் கைதான வழிப்பறி கொள்ளையர்கள் போல காண்பிக்கப்பட்டிருந்தனர். அந்த போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தான் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவத்து குறிப்பிடத்தக்கது.