V4UMEDIA
HomeNewsKollywood'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்த நரேன்!

‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்த நரேன்!

நடிகர் நரேன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் இணைந்துள்ளது குறித்து மனம்  திறந்துள்ளார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். ‘கைதி’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் நரேன் தற்போது விக்ரம் படத்திலும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கைதி படத்தை அடுத்து நரேன் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க இருக்கிறார். 

தற்போது விக்ரம் படத்தில் இணைந்தது குறித்து நரேன் மனம் திறந்துள்ளார். “நான் துபாயில் ஒரு தமிழ் படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். நான் மீண்டும் இந்தியாவுக்கு வந்ததும், எனக்கு ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. கமல் சாருடன் நடிப்பது எனக்கு ஒரு கனவு நனவாகும். நான் நடிப்பில் இறங்குவதற்கு காரணம் அவர் தான். அவருடன் பணியாற்றுவதும்,  லோகேஷின் இயக்கத்தில் நடிப்பது மிகவும் பெரியது. இயக்குனர் லோகேஷின் பெரிய ரசிகர் நான். அது அவருக்கும் தெரியும்.

இது நிச்சயமாக கைதியை விட பெரியதாக இருக்கும். ஆகஸ்ட் முதல் எனது பகுதிகளுக்கான படப்பிடிப்பைத் தொடங்குவேன்.கைதியில் நடித்ததை விட  இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும். கைதி படத்திற்குப் பிறகு எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை போலீஸ் கதாபாத்திரமாகவே கிடைத்தன. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன். விக்ரம் படத்தில் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்”  என்று தெரிவித்துள்ளார். 

விக்ரம் படத்தை கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஜூலை இறுதியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Most Popular

Recent Comments