V4UMEDIA
HomeNewsரசிகர்களுக்கு ரஷ்மிகா கோரிக்கை!

ரசிகர்களுக்கு ரஷ்மிகா கோரிக்கை!

மிக நீண்ட தூரத்தில் இருந்து பயணம் செய்து என்னைக் காண யாரும் வர வேண்டாம் என்று நடிகை ரஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தீவிரமான ரசிகர்கள் சிலர் தங்களின் பேவரைட் நடிகர்களைக் காண பல தூரம் பயணம் செய்து காண வருகின்றனர்.

நடிகை ரஷ்மிகா ரசிகர்கள் இவ்வாறு நீண்ட தூரம் பயணம் செய்து வருவது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.” மக்களே உங்களில் சிலர் என்னை காண்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து வருவதாகவும், என்னைக் காண என் வீட்டிற்குச் செல்வதாகவும் தெரிய வந்தது. தயவு செய்து அப்படியே யாரும் செய்யாதீர்கள். இவ்வளவு தூரம் பயணம் செய்து வரும் உங்களை என்னால் பார்க்க முடியவில்லை என்னும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் உங்களை ஒரு நாள் கட்டாயமாக சந்திப்பேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்போதைக்கு சமூக வலைத்தளங்களில் மட்டும் உங்கள் அன்பை காண்பியுங்கள். நான் உற்சாகமாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Most Popular

Recent Comments