ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி முத்து உள்ளிட்ட 8 பேரின் சமூக வலைத்தள பக்கங்களை முடக்குமாறு புகார் எழுந்துள்ளது.சமூக வலைதள பக்கங்களில் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி முத்து, திருச்சி சாதனா உள்ளிட்ட டிக்டாக் பிரபலங்களின் ஆபாச பேச்சு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கிடையே உள்ள சண்டையை ஆபாச பேச்சுக்கள் மூலம் யூடியூப் பக்கங்களில் வீடியோ வெளியீடு ஊரறிய செய்து வருகின்றனர். இதை பலர் ரசித்தாலும் எதிர்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.ஏற்கனவே ஆபாச பேச்சு வழக்கில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். அவரைப் போலவே இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது. பள்ளி தாளாளர் முஹைதீன் இப்ராஹிம் என்பவர் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இணையதளத்தில் ஆபாசமாக பேசி வரும் ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டும் என மக்கள் அதிகார இயக்கம் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன்ல வகுப்புகளுக்காக இணையத்தை பயன்படுத்தும் போது இதுபோன்ற வீடியோக்களை மாணவர்கள் பார்க்க நேரிடும் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.