முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக முதல்வராக கடந்த மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் எதிர்கட்சிகள் வாய்ப்பிளக்கும் வகையில் தமிழகத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் நடைமுறைப்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரியணை ஏறியதிலிருந்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, மக்கள் வாழ்வாதாரம் என அடுத்தடுத்த சவால்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் வரிசைக்கட்டி நின்றன. இவை அனைத்தையும் சமாளித்து நாட்டை இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு வர மு.க ஸ்டாலின் பம்பரமாக சுழன்று பணியாற்றினார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் பல வீடியோக்கள் வைரலாகி இருக்கின்றன. ஆட்சிக்கு வந்த பிறகு அப்படி ஒரு வீடியோ கூட தென்படவில்லை. காரணம், அவ்வளவு பிஸியாக அவரது நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் தினமும் எளிமையான உடற்பயிற்சிகளை வருவது போன்ற வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.