V4UMEDIA
HomeNewsKollywood'பீஸ்ட்' படப்பிடிப்புக்குத் தயாராகும் பூஜா ஹெக்டே

‘பீஸ்ட்’ படப்பிடிப்புக்குத் தயாராகும் பூஜா ஹெக்டே

தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படத்தின் படுதோல்வி காரணமாக அவருக்குத் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே சமயம், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். ஹிந்தியிலும் முன்னேறி வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நாயகனாக நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஜார்ஜியா நாட்டில் நடந்தது. அதன்பின் கொரானோ தொற்று காரணமாக படக்குழுவினர் இந்தியா திரும்பினர். மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே, டான்ஸ் ரிகர்சல் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நன்றாக நடனமாடும் ஹீரோக்களில் விஜய் முதன்மையானவர். அவருக்கு ஈடு கொடுத்து நடனமாடும் ஹீரோயின்கள் இங்கு இல்லை என்று சொல்லலாம். தெலுங்கில் ‘புட்ட பொம்மா’ பாடல் நடனம் மூலம் அதிகம் பேசப்பட்டவர் பூஜா. நன்றாக நடனமாடும் விஜய்யும், பூஜாவும் இணையும் படம் என்பதால் ‘பீஸ்ட்’ படத்தில் நடனங்கள் தனி ஸ்டைலில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Popular

Recent Comments