V4UMEDIA
HomeNewsKollywoodமாயத்திரை விரைவில் திரையரங்குகளில் வெளியீடு!

மாயத்திரை விரைவில் திரையரங்குகளில் வெளியீடு!

மாயத்திரை விரைவில் திரையரங்குகளில் வெளியீடு!

பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார்.டூலெட், திரௌபதி  படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.இசையமைப்பாளர் S .N அருணகிரி இசைமைக்கிறார் . V.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார் .

இப்படத்திற்கு  சென்சார் குழுவினரால்  UA சான்றிதழ் வழங்க பட்டுள்ளது . திரையரங்குகள் திறந்த சில வாரங்களில் வெள்ளித்திரை விருந்தாக மாயத்திரை திரைக்கு வர இருக்கிறது .

மாயத்திரை -இது ஒரு பேய் படம் .ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .இந்தப் படத்தில் அதிகமாக பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம் . இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்.

நடிகர்கள் : அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன்தொழில்நுட்பக்குழு :  
இயக்கம் – தி.சம்பத் குமார்
தயாரிப்பு – V.சாய்
இசை – S .N அருணகிரி
ஒளிப்பதிவு -இளையராஜா
கலை இயக்கம்  – பத்மஸ்ரீ தோட்டா தரணி
நடனம் – ராதிகா
சண்டைப்பயிற்சி – பிரதீப் தினேஷ்
சவுண்ட் என்ஜினியர் – அசோக்  
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Most Popular

Recent Comments