ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை இயக்குனர் சிவன் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 89.
மலையாள சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனராக வலம் வந்தவர் சிவன். அவர் இதுவரை மூன்று தேசிய விருதுகள் வென்றுள்ளார். அபயம், யாகம், கேசு, ஓரு யாத்ரா, கொச்சு கொச்சு மொஹங்கல் மற்றும் கிலிவதில் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் இவரது மகன் தான். இயக்குனர் சிவனுக்கு சந்தோஷ் சிவன், சங்கீத் சிவன், சஞ்சீவ் சிவன் என மூன்று மகன்களும் சரிதா ராஜீவ் என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் சிவனுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமாகியுள்ளார். இதுகுறித்த பதிவு அவரது மகன் சங்கீத் சிவன் வெளியிட்டுள்ள பதிவில் “எனது தந்தை திரு.சிவன் இன்று காலமாகியுள்ளார் என்ற துன்பகரமான செய்தியை உங்களுடன் மிகவும் சோகத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர் எங்கள் உத்வேகம் & முன்மாதிரி. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தொலைநோக்கு ஆகியவற்றின் மூலம் சாதித்தவர். எங்கள் அடுத்த டுத்த பயணங்களில் அவர் தொடர்ந்து எங்களுக்கு வழிகாட்டுவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்றென்றும் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் & எப்போதும் எங்கள் இதயத்தில் அவர் இருப்பார். . மேகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையில் உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எங்களை கவனிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஓம் சாந்தி.” என்று தெரிவித்துள்ளார்.