V4UMEDIA
HomeNewsKollywoodமகன்களுடன் நடிகர் தனுஷ்.. வைரல் புகைப்படம் !

மகன்களுடன் நடிகர் தனுஷ்.. வைரல் புகைப்படம் !

தமிழ் சினிமாவில் தனது அபார திறமையால் அசுர வளர்ச்சியை பெற்று வருகிறார் நடிகர் தனுஷ். கோலிவுட்டில் தொடங்கிய இவரது சினிமா வாழ்க்கை ஹாலிவுட் வரை சென்றுவிட்டது.  தற்போது ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள தனுஷ், விரைவில் சென்னை திரும்புகிறார். இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் ‘டி 43’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள உள்ளார். பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் ஒரு படம், ‘ராட்சசன்‘ இயக்குனர் ராம் குமாரின் படம்,  செல்வராகவனுடன் ‘நானே வருவேன்’ என வரிசையாக பல படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இதற்கிடையே கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. அதையொட்டி நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில் தந்தையர் தின வாழ்த்துக்கள், எப்போதும் குழந்தைகளின் முதல் ஹீரோ தந்தை தான். அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். லவ் யூ பசங்களா. நீங்கள்தான் எனது உலகத்தை அழகாக மாற்றினீர்கள் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Most Popular

Recent Comments