Home News Kollywood சிம்புவின் ‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் டீசர் வெளியானது.. ரசிகர்கள் வரவேற்பு !

சிம்புவின் ‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் டீசர் வெளியானது.. ரசிகர்கள் வரவேற்பு !

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவிற்கு கம்பேக் கொடுக்கும் படமாக மாறவுள்ளது ‘மாநாடு’. வெங்கட் பிரபுவின் அரசியல் அதிரடியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிம்பு – எஸ்.ஜே.சூர்யா காமினேஷன் எப்படி இருக்கப்போகுது என்பதை பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படத்தில் சிம்புடன் ஹீரோயின் ஜோடியாக கல்யாணியின் ரொமென்ஸ் சீசன்கள் அட்டகாசமான வந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படம் பெரிய எதிர்ப்பார்பை உருவாக்கியுள்ளது. 

இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், டேனியல் அன்னி போப், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் ஆடியோ உரிமையை யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான meherezylaa டீசர் இன்று வெளியாகியாகியுள்ளது. இந்த பாடலின் டீசருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.