V4UMEDIA
HomeNewsKollywoodதிருமணம் எப்போது ? டாப்ஸி பதில்

திருமணம் எப்போது ? டாப்ஸி பதில்

ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியவர் நடிகை டாப்ஸி. தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிஸியான நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள டாப்ஸி தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என எல்லா கதாநாயகிகளை போலவே வழக்கமான பதிலை அளித்துள்ளார்.

அதேசமயம் இன்னொரு தகவலையும் அவர் கூறியுள்ளார், அதாவது எப்போது, தான் வருடத்திற்கு 2 படங்களில் மட்டும் நடிக்கும் அளவிற்கு நிலைமை மாறுகிறதோ, அப்போது திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் தற்சமயம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments