V4UMEDIA
HomeNewsKollywoodபரதநாட்டியம் கற்கும் அசின் மகள்

பரதநாட்டியம் கற்கும் அசின் மகள்

தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நம்பர் 1 நடிகையாக இருந்தவர் அசின். ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தில் அறிமுகமாகி ‘கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம், காவலன்’ உள்ளிட்ட பத்து படங்களில் நடித்தவர்.

ஹிந்திக்குச் சென்று அங்கு முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டு சில படங்களில் நடித்த பின் மைக்ரோமேக்ஸ் மொபைல் போன் கம்பெனியின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவைக் காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு மூன்று வயதில் அரின் என்ற மகள் இருக்கிறார்.

எப்போதோ ஒரு முறை தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தினரைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் அசின் நேற்று தன்னுடைய மூன்று வயது மகள் அரின் கதக் நடனம் கற்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “மூன்று வயது குழந்தையின் வாரஇறுதி கதக் பயிற்சி,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அசினும் மூன்று வயதாக இருக்கும் போதே பரதநாட்டியம் கற்க ஆரம்பித்தவராம். அது போலவே தன்னுடைய மகளையும் மூன்று வயதிலேயே நடனம் கற்றுக் கொள்ள வைத்துள்ளார்.

Most Popular

Recent Comments