V4UMEDIA
HomeNewsமுதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி கொடுத்த மலையாள தயாரிப்பாளர்

முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி கொடுத்த மலையாள தயாரிப்பாளர்

கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவியதால் தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர், நிவாரண நிதி திரட்டி வருகிறார். தமிழ் திரைப்பட கலைஞர்கள் நிதி வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மலையாளப் படத் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.

மலையாளத்தில் பழசிராஜா, காயங்குளம் கொச்சுண்ணி உள்ளிட்ட பிரமாண்ட படங்களை தயாரித்தவர். தமிழில் தூங்காவனம், தனுசு ராசி நேயர்களே படங்களை தயாரித்துள்ளார். இதுதவிர சிட்பண்ட் நிறுவனங்கள், ஓட்டல்களையும் நடத்தி வருகிறார். நிவாரண நிதி கொடுக்க தமிழ் தயாரிப்பாளர்கள் தயங்கிக் கொண்டிருக்கும்போது மலையாள தயாரிப்பாளர் ஒரு கோடி கொடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Most Popular

Recent Comments