V4UMEDIA
HomeNewsKollywoodநேரடியாக டிவியில் வெளியாகிறது வெள்ளை யானை!!

நேரடியாக டிவியில் வெளியாகிறது வெள்ளை யானை!!

தனுஷ் நடித்த திருடா திருடி, சீடன், அமீர் நடித்த யோகி, ஜீவா நடித்த பொறி படங்களை இயக்கிய சுப்பிரமணியம் சிவா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் வெள்ளை யானை . விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் இப்படம் உருவாகி உள்ளது.

சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மினி ஸ்டுடியோஸ் வினோத் குமார் தயாரித்துள்ளார் .இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்துமே பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக வெளியாகாமல் இருந்தது.

தற்போது தியேட்டர்கள் திறக்கப்படும் சாத்தியக் கூறுகள் இல்லாததால் படத்தை நேரடியாக டிவியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே தொலைக்காட்சி உரிமம் வழங்கப்பட்டிருந்த நிறுவனத்திடமே படத்தின் வெளியீட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. படத்தை முதன் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் அந்த நிறுவனம் அதன்பிறகு அது நடத்தும் ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது.

ஏற்கெனவே சமுத்திரகனி நடித்த ஏலே, யோகி பாபு நடித்த மண்டேலே, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி, ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ளே படங்கள் நேரடியாக டிவியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments