சமீபகாலமாக நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்படுவது அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் காமெடி மற்றும் குணசித்ர நடிகரான சார்லியின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக. அவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கு டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராமில் கணக்கு இல்லை. பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களோடு நேரடியாக தொர்பு உள்ளதால் சமூக வலைத்தளங்கள் பக்கம் நான் வரவில்லை. ஆனால் எனது பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. என் மீது அபிமானம் கொண்டவர்கள் அந்த கணக்கை பின்தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதன் மூலம் சிலருக்கு பணம் கிடைக்கும் என்றால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் என் பெயரில் தவறான கருத்துக்கள் வெளிவந்தால் அது எனது இமேஜை பெரிதும் பாதிக்கும், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் என்பதால் அதனை தடுக்க கோரி போலீசில் புகார் அளித்திருக்கிறேன். என்றார்.