சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில், சிலம்பரசன், ராஷிகண்ணா, பாரதிராஜா மற்றும் பலர் நடித்த ‘ஈஸ்வரன்’ படம் இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளிவந்தது. ஒரு பக்கம் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் அப்போது வெளிவந்து போட்டியில் இருந்தாலும் இப்படமும் ஓரளவிற்கு சமாளித்து ஓடியது.
‘ஈஸ்வரன்’ படம் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் வெளியாகும் போதே வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், தியேட்டர் உரிமையாளர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே வெளிநாட்டில் ஓடிடியில் வெளியிடுவதை தள்ளி வைத்தார்கள்.
கடந்த வருடத்திலிருந்து ஒரு புதிய படம் வெளிவந்தால் அதிக பட்சம் 50 நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாகி விடும். ஆனால், ‘ஈஸ்வரன்’ படம் மட்டும் ஓடிடி தளத்தில் வெளியாகவேயில்லை. இப்போது 5 மாதங்கள் கழித்து படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. நாளை(ஜூன் 12) முதல் இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.