நடிகர் கார்த்தி முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி ஓராண்டிற்கு மேல் ஆகியும் மக்கள் அல்லல்பட்டு வருவது தீர்ந்தபாடில்லை. கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாகி வருவது எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நமக்கிருக்கும் ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. எனவே அரசும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தி வருகிறது.

இருப்பினும் மக்களுக்கு தடுப்பூசி குறித்த அச்சம் நிலவி வருவதால் திரைத்துறை பிரபலங்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது நடிகர் கார்த்தி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் பிஎஸ் ‘மித்ரன்’ இயக்கத்தில் சர்தார் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.