V4UMEDIA
HomeNewsKollywoodவெண்பனி மலரே,' மறக்க முடியாத ஒன்று - ஷான் ரோல்டன்

வெண்பனி மலரே,’ மறக்க முடியாத ஒன்று – ஷான் ரோல்டன்

தனுஷ் இயக்குனராக அறிமுகமான ‘பவர் பாண்டி’ படத்தில் தனுஷ் எழுதி ஷான் ரோல்டன் இசையமைத்த ‘வெண்பனி மலரே..’ பாடல் அப்போது சூப்பர் ஹிட்டான ஒரு பாடலாக அமைந்தது. இப்பாடல் 3 வெர்ஷன்களில் வெளியானது. ஷான் ரோல்டன், ஸ்வேதா மோகன், தனுஷ் ஆகியோர் தனித்தனியாகப் பாடியிருந்தார்கள். இப்போதும் இந்த மெலடி பாடல்களை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

நேற்று இப்பாடலைப் பற்றி நினைவு கூர்ந்த ஷான் ரோல்டன், “என் குரல் மற்றும் பியானோ. இந்தப் பாடலை எனக்கு மறக்க முடியாத ஒன்றாக மாற்றிய மிக அழகான ரசிகர்களுக்காக இதை அர்ப்பணிக்கிறேன்,” என அவரே பியானாவில் வாசித்து பாடலைப் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். “தனுஷ் கொஞ்ச நாட்களுக்கு படத்தை இயக்க மாட்டார், இந்தப் படம் அடுத்த பத்து வருடங்களுக்கு எனக்கு நிறைய ஞாபகப்படுத்தும். அனைவருக்கும் நன்றி“, என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவரது பதிவுக்கு தனுஷ், “இதற்கு நீங்கள்தான் காரணம், நன்றி” என பதிலளித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடித்த பிரசன்னா மற்றும் பலரும் வீடியோவைப் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

தனுஷ் மீண்டும் படம் இயக்கினால் அப்படத்திற்கு ஷான் ரோல்டன் தான் கண்டிப்பாக இசையமைப்பார் என்பது ரசிகர்களின் கணிப்பு.

Most Popular

Recent Comments