தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் சென்னை, தியாகராயநகர் துணை ஆணையரிடம் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி. பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஜீவாவின் தந்தை ஆவார். இவர் படங்களுக்கு பைனான்ஸூம் செய்து வருகிறார்.

நடிகர் விஷால் தயாரித்த சில படங்களுக்கு ஆர்.பி.சவுத்ரி நிதி உதவி செய்துள்ளார். இதற்காக ப்ரோட் நோட் பத்திரம் பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கொடுத்த பின்னரும் ப்ரோநோட் பத்திரத்தை தராமல் ஆர்.பி.சவுத்ரி இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விஷால் பல முறை அவரிடம் முறையிட்டும் திருப்பி தரவில்லை.
இதனால் ப்ரோநோட் பத்திரத்தை வைத்து மோசடி செய்ய திட்டமிடுவதாக கூறி சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி மீது தியாகராயநகர் துணை ஆணையரிடம் நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார்.