V4UMEDIA
HomeNewsKollywoodரசிகர்களுக்கு சூர்யா, கார்த்தி நிதி உதவி

ரசிகர்களுக்கு சூர்யா, கார்த்தி நிதி உதவி

நடிகர் சூர்யா குடும்பத்தினர் கொரோனா நிவாரண நிதியாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்திருந்தனர். இவர்களது ரசிகர்கள் பலர் கொரோனா காலக்கட்டத்தில் பல உதவிகளை செய்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு தலா 5 ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

இதேபோல் கார்த்தியும் தன்னுடைய மன்ற நிர்வாகிகள் 150 பேருக்கு தலா 5000 வழங்கியுள்ளார். நிதி உதவி சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இவர்களின் இந்த இன்ப அதிர்ச்சியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Most Popular

Recent Comments