பார்த்திபன் மட்டுமே நடித்து, இயக்கி, தயாரித்து வெளியிட்ட படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றதோடு, பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்றது. அதோடு தேசிய விருதையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை ஹிந்தியில் வெளியிட தயாராகிக் கொண்டிருக்கிறார் பார்த்திபன்.
அதையடுத்து ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு ஹிந்தியில் என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழியை அறிந்தவர்கள் மட்டும் சொல்லுங்கள் என்று தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார் பார்த்திபன்.