ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பிப்ரவரி மாதம் தனது குடும்பத்தாருடன் அமெரிக்கா சென்றார் தனுஷ். படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்கும் வரை அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருந்து முடித்துக் கொடுத்துள்ளார். இதனால் தமிழக சட்டசபை தேர்தலில் கூட ஓட்டளிக்க அவர் வரவில்லை.

தனுஷ் எப்போது இந்தியா திரும்புவார் என்பது இனிமேல்தான் தெரிய வரும். அவரது மாமனார் ரஜினிகாந்தும் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் என்று முன்னர் தகவல் வெளியாகி இருந்தது. அதுவரையில் தனுஷ் அங்கு தங்கியிருப்பாரா அல்லது மனைவி ஐஸ்வர்யாவை உதவிக்கு இருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் திரும்புவாரா என்பது சீக்கிரம் தெரிய வரும்.
சென்னை வந்ததும் தமிழ் படங்களின் படப்பிடிப்பை தனுஷ் தொடர்வார். கார்த்திக் நரேன் இயக்கும் படம், அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் ஆகிய தமிழ்ப் படங்களில் தனுஷ் நடித்து வருகிறார்.