‘மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 இரண்டாம் பாகம், வந்தா ராஜாவாதான் வருவேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், ‘பிக் பாஸ்’ சீசன் இரண்டு மூலம் பிரபலமானவர் மஹத் ராகவேந்திரா. அவருக்கும் மாடல் ஆன பிராச்சி மிஷ்ரா என்பவரும் நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்தாண்டு பிப்ரவரி மாதம் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக மஹத் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் மனைவிக்கு வளைகாப்பு நடத்திய வீடியோவையும் வெளியிட்டிருந்தார். நேற்று இத்தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அது பற்றிய தகவலை டுவிட்டரில், “கடவுள் ஆசீர்வாதத்தால் இன்று(நேற்று ஜூன் 7) காலை எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிராச்சி, நான் இருவரும் அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும் அன்புக்கும் நன்றி, அப்பாவாக ஆகியிருப்பது உற்சாகமாக உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மஹத்திற்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.மஹத் தற்போது “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, இவன் தான் உத்தமன், காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.