சிம்பு நடிப்பில் உருவாக்கி வரும் பத்து தல படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஆர் ரஹ்மான் ஏற்கனவே க்ரிஷ்ணா உடன் சில்லுனு ஒரு காதல் படத்தின் பணியாற்றியுள்ளார். அந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் தற்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘முப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம். நடிகர் கவுதம் கார்த்திக்கும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
எனவே தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் பத்து தல படத்தின் பாடல்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் பத்து தல படத்தில் இரண்டு பாடல்களை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.