V4UMEDIA
HomeNewsMollywoodஐஎம்டிபி தரவரிசையில் திரிஷ்யம் 2 முதலிடம்

ஐஎம்டிபி தரவரிசையில் திரிஷ்யம் 2 முதலிடம்

ஐஎம்டிபி நிறுவனம் அவ்வப்போது அந்த வருடத்தில் வெளியாகும் படங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம், தற்போதைய ஐஎம்டிபி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களை ஒப்பிடும்போது 8.8 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது

கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வெளியான திரிஷ்யம் முதல்பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அதன் இரண்டாம் பாகம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறுமா என்கிற சந்தேகம் பரவலாக இருந்தாலும், ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்பையும் ஈடுகட்டி, முதல் பாகத்திற்கு சற்றும் குறையாமல், விறுவிறுப்பாக படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப். அதனால் இந்தப்படம் மொழிகளை கடந்து, பார்வையாளர்களை வசீகரித்ததால் தான், ஐஎம்டிபி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

Most Popular

Recent Comments