V4UMEDIA
HomeNewsகொரோனா ஹெல்ப் லைன் துவங்கிய வரலட்சுமி!

கொரோனா ஹெல்ப் லைன் துவங்கிய வரலட்சுமி!

சேவ் சக்தி பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகை வரலட்சுமி, அதன் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக ஹெல்ப் லைன் ஒன்றை துவங்கி உள்ளார் வரலட்சுமி. இதை நடிகர் உதயநிதி துவங்கி வைத்தார். ஆக்சிஜன் பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் தேவை உள்ளிட்ட பல மருத்துவ தேவைக்கு இந்த சேவையை அழைக்கலாம்.

அதோடு, இந்த ஊரடங்கு நேரத்தில் பசியால் வாடும் ஆதரவில்லாத நாய்களுக்கு உணவளிப்பதற்காக 2 டன் உணவுப்பொருட்களையும் உதயநிதியிடம் வழங்கினார். இந்த சந்திப்பின்போது வரலட்சுமியின் தாயார் சாயாவும் உடன் இருந்தார். இதுகுறித்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி.

Most Popular

Recent Comments