V4UMEDIA
HomeNewsKollywoodமகனை அறிமுகப்படுத்திய ஷ்ரேயா கோஷல்

மகனை அறிமுகப்படுத்திய ஷ்ரேயா கோஷல்

தமிழ்த் திரையுலகில் முன்னணி பாடகிகளில் ஒருவர் ஷ்ரேயா கோஷல். பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி என பல மொழிகளிலும் பாடியுள்ளார். இவருக்கும் ஷைலாதித்யா முகோபத்யாய என்பவருக்கும் 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு கடந்த மே மாதம் 22ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

தன்னுடைய குழந்தையை இன்று பெயருடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் ஷ்ரேயா. “தேவ்யான் முகோபத்யாய -வை அறிமுகப்படுத்துகிறேன். மே 22ம் தேதி வந்த அவன் எங்கள் வாழ்க்கையை எப்போதும் இல்லாத அளவில் மாற்றியுள்ளான். அவன் பிறந்த போது அந்த முதல் பார்வையில் ஒரு அம்மா, அப்பா உணரும் அன்பில் எங்களது இதயத்தை நிரப்பினார். எந்த கட்டுப்பாடும் இல்லாத அதிகப்படியான அன்பு அது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular

Recent Comments