இந்த கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து தங்கள் குடும்பங்களை மறந்து இரவும் பகலுமாக மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப் டெக்னீசியன்களை பாராட்டும் வகையில் புதுக்கோட்டை

மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக புதுக்கோட்டை நகர பகுதியில் அமைந்துள்ள முத்துமீனாட்சி மருத்துவமனையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து வழங்கியும் அவர்களுக்கு தளபதி விஜய்யின் பெயர் பதிக்கப்பட்ட ஒரு கிராம் தங்க நாணயமும் மற்றும் பிரஷர் குக்கர் வழங்கி பாராட்டினர்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜெ.பர்வேஸ் மற்றும் சிவகங்கை மாவட்ட தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .