அண்ணாத்த, சாணிக்காயிதம், சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதில் ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. மேலும், தெலுங்கில் நிதினுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்த மார்ச்சில் திரைக்கு வந்த படம் ரங்தே.

அப்படத்தை வருகிற ஜூன் 12-ந்தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள். இதற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த பெண்குயின் என்ற படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.