V4UMEDIA
HomeNewsKollywoodஓடிடி தளத்தில் வெளியாகும் கடைசி விவசாயி!!

ஓடிடி தளத்தில் வெளியாகும் கடைசி விவசாயி!!

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் இயக்கிய மணிகண்டன் தற்போது இயக்கி முடித்துள்ள படம் கடைசி விவசாயி. இதனை இயக்குநர் மணிகண்டனே தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் நல்லாண்டி என்கிற முதியவர் தான் கதையின் நாயகன். அவரை சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை சர்வதேச விருது விழாக்களுக்கு அனுப்பி விட்டு பின்னர் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால் கொரோனா கால சூழ்நிலைகள் அதற்கு இடம் தராததால் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தனர். பல ஓடிடி தளங்கள் படத்தை வாங்க முட்டி மோதியதில் கடைசியாக அமேசான் நிறுவனம் நல்ல விலை கொடுத்து படத்தை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட இருக்கிறது.

Most Popular

Recent Comments