V4UMEDIA
HomeNewsஅலட்சியம் வேண்டாம் - கொரோனாவிலிருந்து மீண்ட காளி வெங்கட்

அலட்சியம் வேண்டாம் – கொரோனாவிலிருந்து மீண்ட காளி வெங்கட்

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் காளி வெங்கட். மெர்சல், தெறி, மாரி, மாரி 2, கொடி, ஈஸ்வரன், சூரரைப்போற்று, வேலைக்காரன், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

காளி வெங்கட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற மருத்துவமனை கிடைக்காமல் வீட்டிலேயே தனித்திருந்து குணமடைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். 22 நாட்கள் அறிகுறிகள் இருந்தன. இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே இருந்தது. கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்தேன். மருத்துவமனையில் சேர்ந்து சிகிக்சை பெற வேண்டும் என்று சொன்னார்கள். அதற்காக தேடியபோது மருத்துவமனை கிடைக்கவில்லை. போன மாதம் தான் இது நடந்தது. அதன்பின் டாக்டர் ஒருவரின் உதவியோடு உரிய சிகிச்சை எடுத்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன். கொரோனா வராமல் பார்த்துக்கொள்வது தான் முக்கியம். பதற்றமாக கூடாது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அதனால கொரோனா வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள். கொரோனா வந்தால் பயப்பபடாதீர்கள், அதே நேரத்தில் அலட்சியப்படுத்தவும் செய்யாதீர்கள். இவ்வாறு நடிகர் காளி வெங்கட் தனது வீடியோவில் கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments