V4UMEDIA
HomeNewsKollywoodரசிகர்களிடம் கார்த்தி கேட்கும் பிறந்த நாள் பரிசு

ரசிகர்களிடம் கார்த்தி கேட்கும் பிறந்த நாள் பரிசு

நடிகர் கார்த்திக்கு இன்று 43வது பிறந்த நாள். இந்த நாளில் வழக்கமாக கார்த்தி தனது உழவன் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவார். சென்னையில் இருந்தால் ரசிகர்களை சந்திப்பார். இது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் இவற்றை தவிர்த்துவிட்ட கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு தனது ரசிகர்களிடம் ஒரு பரிசை கேட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம், இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிக கடுமையாக உள்ளது.

அரசாங்கம் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல், வசிப்பிடத்தைவிட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும். என்று கூறியிருக்கிறார்.

Most Popular

Recent Comments