கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே சிறந்த வழி என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மே 1ம் தேதி முதல் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்தார்கள். ஆனால், இன்னும் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.
அதே சமயம் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி கிடைப்பதாகச் சொல்கிறார்கள். பணம் செலுத்தி போட வேண்டும் என்பதால் மக்களிடம் இன்னும் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. அனைவருக்குமே இலவச தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
இதனிடையே, 18 வயதிற்கு மேற்பட்ட சினிமா பிரபலங்கள் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். நடிகர்கள் கவுதம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண், சூரி, நடிகைகள் நயன்தாரா, ரம்யா பாண்டியன், சாக்ஷி அகர்வால், இயக்குனர்ள் விக்னேஷ் சிவன், திரு, டிவி பிரபலங்கள் திவ்யதர்ஷினி, கனி உள்ளிட்ட சிலர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள்.
சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.