பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மற்றும் அருகில் ஊழல் யூனியன் பிரதேசமான டையூ பிராந்தியத்தில் டவ் தே புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விமானத்தின் மூலம் வான்வழியாக ஆய்வு மேற்கொண்டார்.
நாட்டின் மேற்கு கடற்கரையை நாசப்படுத்திய டவ் தே புயல், திங்கள்கிழமை இரவு குஜராத் கடற்கரையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது மற்றும் படிப்படியாக பலவீனமடைவதற்கு முன்பு மிகக் கடுமையான சூறாவளி புயலாக முன்னேறி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்தியாவின் மேற்கு கடற்கரையில் டவ் தே புயல் வாட்டி வரும் நிலையில், இன்று பிரதமர் மோடி குஜராத்தின் பாவ்நகரை அடைந்தார். அங்கு அவரை முதல்வர் விஜய் ரூபானி வரவேற்றார்.இந்நிலையில் மோடி உனா, டையூ, ஜஃபராபாத் மற்றும் மஹுவா ஆகியவற்றின் வான்வழி ஆய்வை முடித்து விட்டு, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அகமதாபாத்தில் மாநில நிர்வாக அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவார்.

பின்னர் பிரதமர் மாலையில் டெல்லிக்கு திரும்புவார்.பிரதமரின் வருகைக்கு முன்னதாக, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானியுடன் மாநிலத்தில் டவ் தே புயலின் தாக்கம் குறித்து விவாதித்தார்.
1998 முதல் குஜராத்தை பாதிக்கும் வலிமையான சூறாவளி புயல் இது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.