விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் 96. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கௌரி கிஷன். விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். தற்போது தனுஷின் கர்ணன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
\
இதுதவிர சில தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.இந்நிலையில், நடிகை கௌரி கிஷன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சமூக வலைதள பதிவு மூலம் இதனை உறுதிப்படுத்தி உள்ள கௌரி , தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். தான் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று படிப்படியாக குணமாகி வருவதாக தெரிவித்துள்ள அவர், கடந்த வாரம் தன்னை சந்தித்தவர்கள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

🙏😷 pic.twitter.com/6wVy67QFsA— Gouri G Kishan (@Gourayy) April 2, 2021