கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல், ஓராண்டைக் கடந்தும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இடைப்பட்ட காலத்தில் பரவலின் வேகம் குறைந்திருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் ‘கங்குபாய்’ படத்திலும், ரன்பீர் கபூருடன் இணைந்து ‘ப்ரம்மாஸ்திரா’ படத்திலும் நடித்து வருகிறார். சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ரன்பீர் கபூர் இருவருக்கும் சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலியா பட் தன்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்தார்.
.jpg)
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ரன்பீர் கபூர் முற்றிலும் குணமடைந்த நிலையில், தற்போது தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனே தனிமைப்படுத்திக்கொண்ட நான், அடுத்த சில நாட்களுக்கு வீட்டுத் தனிமையில் இருக்க உள்ளேன். மருத்துவர்கள் ஆலோசனையின்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி வருகிறேன். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். தயவுசெய்து கவனமாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
