Home News Kollywood அசுரனுக்கு இரண்டு தேசிய விருதுகள் ! சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் 2 வது முறையாக...

அசுரனுக்கு இரண்டு தேசிய விருதுகள் ! சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் 2 வது முறையாக வென்றுள்ளார் !

மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தட்டிச்சென்றுள்ளார் தனுஷ் . உண்மையிலேயே தனுஷ் நடிப்பு அசுரன் தான்.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரித்திருந்தார்.

தனுஷ் தற்போது தந்து ஹாலிவுட் படமான THE GRAY MAN படப்பிடில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் . இவரது அடுத்த திரைப்படமான கர்ணன் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது .