லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த படம் ‘மாஸ்டர்’. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகின. அவற்றில் குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடலின் இசையும், நடனமும் அதை மொழி வித்தியாசம் இல்லாமல் பலரும் ரசிக்கும்படியாக அமைந்தது.
அப்பாடல் தற்போது யு டியுபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தளபதி விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த பாடல்களில், ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறான் தமிழன்’ மற்றும் ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலின் லிரிக் வீடியோ, ‘பிகில்’ படத்தின் ‘வெறித்தனம்’, ‘தெறி’ படத்தின் ‘என் ஜீவன்’ ஆகியவை 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தன.
இப்போது ‘வாத்தி கம்மிங்’ பாடலின் வீடியோவும் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இரண்டு மாதத்திற்குள் இந்த சாதனையை இப்பாடல் 100 மில்லியன் சாதனையைப் படைத்துள்ளது. இப்பாடலின் லிரிக் மற்றும் வீடியோ இரண்டும் சேர்த்தால் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.