பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் அடுத்து சுஜீத் எழுதி இயக்கிய ‘சாஹோ’ படத்தில் ஷ்ரத்தா கபூருடன் இணைந்து நடிக்கிறார். இந்த பல மொழி அதிரடி திரில்லரில் நடிகர்கள் அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷிராஃப், சங்கி பாண்டே மற்றும் பலர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
யூ.வி கிரியேஷன்ஸ் வம்சி கிருஷ்ண ரெட்டி, பிரமோத் உப்பலபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். சாஹோ ஒளிப்பதிவை மதியும், ஸ்ரீகர் பிரசாத் படத்தின் எடிட்டிங்கையும் கையாண்டுள்ளனர்.
சாஹோ ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது, அதன் பிரமாண்டமான வெளியீட்டிற்கு முன்னதாக, படக்குழு ‘பேட் பாய்’ என்ற வீடியோ பாடலை பல மொழிகளில் வெளியிட்டது. இந்த வீடியோவில் பாலிவுட்டின் திகைப்பூட்டும் திவா ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடம்பெற்றுள்ளார்.
இந்த புதிய பாடலை பாட்ஷா, பென்னி தயால், சுனிதா சரதி ஆகியோர் பாடியுள்ளனர், பாட்ஷா இசையமைத்து விக்னேஷ் சிவன் இந்தப் பாடலிற்கு வரிகள் எழுதியுள்ளனர்.v