திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதளித்து சிறப்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வாங்கும் திரைப் பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.
கலைமாமணி விருது பெறும் நடிகர்கள்
ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறும் நடிகைகள்
பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோருக்கும், நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இசைத்துறையில் கலைமாமணி விருது பெறுபவர்கள்
இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா ஆகியோருக்கும், பாடகர்கள் ஜமுனா ராணி, சுஜாதா, அனந்து ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறும் தயாரிப்பாளர்கள்
கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ் ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறும் இயக்குநர்கள்
கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி, ஆடை வடிவமைப்பாளர் ராஜேந்திரன், ஒப்பனையாளர்கள் சண்முகம், சபரிகிரீசன், புகைப்படக் கலைஞர் சிற்றரசு, பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப், மக்கள் தொடர்பாளர் சிங்காரவேலு, ஷேனை வாசிப்பாளர்கள் பல்லேஷ் – கிருஷ்ண பல்லேஷ் மற்றும் தபேலா வாசிப்பாளர் வி.எல்.பிரசாத் ஆகியோருக்கும் தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.