V4UMEDIA
HomeNewsKollywoodநிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி தீபாரதனை காண்பித்த ரசிகர்கள்: வைரல் புகைப்படம்!

நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி தீபாரதனை காண்பித்த ரசிகர்கள்: வைரல் புகைப்படம்!

கோலிவுட்டில் பிரபல நடிகர், நடிகைகளுக்கு அவர்களின் ரசிகர்கள் கோயில் கட்டுவது ஒன்றும் புதியதல்ல. எம்ஜிஆர், குஷ்பு, நமீதா, ஹன்சிகா என பலருக்கும் அவர்களின் ரசிகர்கள் கோயில் கட்டி உள்ளனர்.சமீபத்தில் நயன்தாராவுக்கும் அவரது ரசிகர் ஒருவர் கோயில் கட்டி இருந்தார். அந்த வரிசையில் தற்போது, தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்த நிதி அகர்வாலுக்கும் அவரது ரசிகர்கள் கோயில் கட்டி உள்ளனர்.

தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் தமிழில் பூமி, ஈஸ்வரன் ஆகிய 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கிலும் 2 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். தற்போது தான் தமிழில் 3 வது படத்தில் நடித்து வருகிறார். அதற்குள் அவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.இது பற்றி நிதி அகர்வால் கூறுகையில், இது எனக்கு காதலர் தின பரிசு என அவர்கள் கூறினர். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. ஷாக் ஆகிட்டேன். ஆனால் ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த கோயில் எங்கிருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் சென்னையில் உள்ளது என்று மட்டும் சொன்னார்கள். எனது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் தான் இதனை செய்துள்ளனர்.

Most Popular

Recent Comments