V4UMEDIA
HomeNewsKollywoodசிவகார்த்திகேயன் பட நாயகி நடிக்கும் 'டிக்டாக்'

சிவகார்த்திகேயன் பட நாயகி நடிக்கும் ‘டிக்டாக்’

ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் ‘டிக்டாக்’. இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். ‘எங்கிட்ட மோதாதே’ படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

மூடர்கூடம் ராஜாஜி, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். இவர் இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர். மேலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாம்ஸ், முருகானந்தம், வினோதினி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய மால் ஒன்றில் scary house எனப்படும் பேய்வீடு செட் அமைத்து பார்வையாளர்களுக்கு ‘த்ரில்’ வழங்கும் வேலையை செய்து வருகின்றனர் நாயகனும் நாயகியும். இந்த வீட்டில் நிஜமான பேய் ஒன்று நுழைவதும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளையும் காமெடி, த்ரில் என கலந்து படமாக்கியுள்ளார்கள். பேய்க்கான பிளாஸ்பேக்கும் இதுவரை சொல்லப்படாத ஒன்றாக இருக்கும்

Image

இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் நாயகன் ராஜாஜி இந்தப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அதில் இன்னொன்று வில்லன் கதாபாத்திரம். யாருமே நடிக்க தயங்கும் அந்த கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் துணிச்சலாக நடித்துள்ளார் ராஜாஜி. இதற்காக மொட்டையெல்லாம் அடித்துள்ளார் ராஜாஜி.

இளைஞர்களிடம் இருந்து பிரிக்கமுடியாமல் இரண்டற கலந்திருந்த, டிக்டாக் செயலி போல, கமர்ஷியலான அம்சங்களுடன் இந்தப்படம் உருவாகி இருப்பதால் டிக்டாக் என்றே டைட்டிலும் வைத்து விட்டார்கள். அதற்கேற்றவாறு, “எவன்டா சொன்னான் மாமு.. டிக்டாக் எல்லாம் பேன்னு” என்கிற புரோமோ பாடலையும் உருவாக்கியுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் ஏ.கே.ரிஷால் சாய். ராட்சசன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த ஷான் லோகேஷ் இந்தப்படத்திலும் தனது கைவண்ணத்தை காட்டியுள்ளார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோவையிலேயே நடைபெற்றுள்ளது.. மேலும் பிரமாண்டமான பேய் வீடு செட் ஒன்றையும் அமைத்து அதில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

விரைவில் இந்தப்படத்தின் இசைவெளியீடு நடக்கவுள்ளது. படத்தை மார்ச் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் அடுத்துவரும் நாட்களில் சோஷியல் மீடியாவை இந்த டிக்டாக் ஆக்கிரமிப்பு செய்யப்போகிறது என்பது நன்றாகவே தெரிகிறது..

Most Popular

Recent Comments